• Dec 26 2024

காதல் கணவருடன் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய நடிகை அமலாபால்-செம கியூட்டாக இருக்கிறாங்களே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமாகி பின் சர்ச்சையில் சிக்கினார். அப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார்.


இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார்.


இதனை அடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் அண்மையில் தன்னுடைய நண்பரான ஜெகத் தேசாய், என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருடைய திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைபபடங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement