• Jun 12 2026

தளபதியை ஏன் டார்கெட் செய்கிறீர்கள்? விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை அம்பிகா.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி, ‘தவெக’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி முழுமையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய பயணத்தில் அவருக்கு பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் ஏற்பட்டு வருகின்றன. 

குறிப்பாக பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி, நேர கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், நடிகை அம்பிகா விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “விஜய்க்கு ஏன் இவ்வளவு தடைகள் வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. இதில் எந்த லாஜிக்கும் தெரியவில்லை. எல்லா கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் விஜய்க்கு மட்டும் நேரம், இடம், போலீஸ் பாதுகாப்பு போன்றவை குறைவாக வழங்கப்படுவது போல் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர், சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். அரசியல் களத்தில் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இது மேலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.


Advertisement

Advertisement