பிக்போஸ் அனைத்து சீசன்களிலும் காதல் மலர்ந்து அது வெளியிலும் இறுதி வரை நிலைத்திருக்கும் அந்த வரிசையில் இந்த சீசனில் வீட்டுக்குள் இருக்கும்போது விஷாலை தர்ஷிகா ஒரு தலையாக காதலித்து வந்தார். எலிமினேட் ஆகி வெளியில் வந்ததும் ஒரு சில விமர்சனங்களை பார்த்ததும் விஷாலுக்கு ஆசையாக கொடுத்த தனது அம்மாவின் மோதிரத்தினை திரும்பி கேட்டு பரபரப்பாக்கினார்.
என்னதான் விஷாலை தர்சிகா காதலித்து இருந்தாலும் விஷால் அன்ஷிதாவுடன் நெருங்கி பழகுவதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பியது. இன்றுவரை நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வருவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விஷாலுடன் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். மேலும் தான் தனியாக shopping செய்த ஒரு புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களிலும் அன்ஷிதா ஒரே மாதிரியான ஆடையை அணிந்திருந்தமையினால் விஷாலுடன் கடைக்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!