• Mar 04 2025

அஜித் -ஷாலினி திருமண விவகாரம் குறித்து பேசிய PRO நிகில் முருகன்..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு ஜோடியாக இருந்து வருபவர்கள் தான் ஷாலினி மற்றும் அஜித் இவர்களுக்கு இருக்கும் chemistry இன்றுவரை மிகவும் அழகாக உள்ளது. சமீபத்தில் கார் ரேஸிங்கில் அஜித் ஜெயித்ததும் ஷாலினி செய்த விடயங்கள் பல இணையத்தில் வைரலாகியது.


இந்த நிலையில் இவர்களது திருமணத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை PRO நிகில் முருகன் தற்போது கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் இது குறித்து "அஜித் - ஷாலினி திருமண வரவேற்பில் நான் PRO வாக இருந்தேன். தாஜ் கன்னிமேரா ஹோட்டலில் அந்நிகழ்வு நடந்தது. பொதுவாக, திருமண நிகழ்வுகளுக்கு வரும் விஜபிகளின் கார் ஓட்டுநர்கள் ஹோட்டல் வாசலில் அவர்களை இறக்கிவிட்டு சாப்பிடாமல் பார்க்கிங் ஏரியாவில் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பார்சல் உணவு மற்றும் தண்ணீர் தரலாமா என அஜித்திடம் கேட்டேன். அவரும் நல்ல யோசனை, செய்யுங்கள் என்றார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த ஹோட்டல் அனுமதி தருகிறதோ அங்கு ரிசப்ஷனை மாற்றி விடலாம் என்றார். ஆனால் அந்த ஹோட்டல் அனுமதி தந்தது. ஒட்டுனர்களுக்கும் உணவு அளித்தோம் " என பேசியுள்ளார்.

Advertisement

Advertisement