• Dec 26 2024

கவின் காதலிக்கு நடந்த திடீர் திருமணம்.. வாழ்த்து சொல்வாரா தளபதி விஜய்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடித்த  ’டாடா’ திரைப்படத்தில் அவரது காதலியாகவும் மனைவியாகவும் நடித்த நடிகை அபர்ணாதாஸ் திருமணம் இன்று நடந்துள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கவின் நடித்த ’டாடா’ மற்றும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை அபர்ணாதாஸ்-க்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் அவர் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் நடிக்க தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.

தீபக் மற்றும் அபர்ணா தாஸ் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரள முறைப்படி இன்று தீபக் - அபர்ணாதாஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை அபர்ணாதாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கவின் மற்றும் விஜய்யுடன் நடித்த நடிகை அபர்ணாதாஸ்-க்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் இருவரும் தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement