• Dec 25 2024

ரெட்ட தல போஸ்டர் ரிலீஸ்? SK டிரெக்டர வச்சே அவர அருண் விஜய் ஓவர்டேக் பண்ணப்போறாரு போலயே?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா பின்னணியோடு சினிமாத்துறைக்குள் வந்தாலும் நல்ல வெற்றி திரைப்படம் அமையாததால் பிரபலமாகாது உள்ள நடிகர்கள் ஏராளம். அவ்வாறு ஹிட்டுக்காக காத்திருக்கும் அருண் விஜயின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.


நடிகர் விஜயகுமாரின் மகனும் , நடிகை ஸ்ரீதேவியின் சகோதரனுமானவர் அருண்விஜய் ஆவார். முறை மாப்பிளை என்ற திரைப்படதின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததே இவரை பிரபலமாக்கியது.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் நடிக்கும் ரெட்டை தல என்ற திரைப்படத்தின் 1 லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு கதாபாத்திரங்கள் போஸ்டரில் காணப்படுவதன் மூலம் இது டபுள் ஆக்சன் படமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. மற்றும் குறித்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே திரைப்படத்தை இயக்கிய கிரிஸ் திருக்குமரன் இயக்க இருப்பதால் சிவகார்த்திகேயனின் இயக்குனரை வைத்தே அவருக்கு பதிலடி கொடுக்க போகிறார் என பல மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement