• Jun 12 2026

நடிகை சைத்ரா ரெட்டி வாழ்க்கையில் திடீர் திருப்பம்! ஆஹா ஓஹோன்னு வாழுறாங்களே.!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர்.

யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமடைந்த இவருக்கு, சன் டிவியில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கயல் என்ற சீரியலில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இதைத் தாண்டி பட வாய்ப்புகளும் சைத்ரா ரெட்டிக்கு குவிந்த வண்ணம் உள்ளது.


தற்போது சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகை சைத்ரா ரெட்டி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தனது கணவர் மற்றும் காருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement