• Jan 01 2025

அநியாயமா ஒரு தாயை கொன்னுட்டிங்களே.. சமூக வலைத்தள பயனாளிகளை வெளுத்த பிரபல நடிகை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் தவறி விழுந்த குழந்தை மீட்கப்பட்ட நிலையில் அந்த தாயின் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனம் காரணமாக அவர் நேற்று தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குழந்தையின் தாயை கடுமையாக விமர்சனம் செய்த சமூக வலைதள பயனாளிகளை பிரபல நடிகை ஒருவர் வெளுத்து வாங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை தவறி விழுந்த நிலையில் அந்த குழந்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் முயற்சியால் காப்பாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த குழந்தையின் தாயாருக்கு கடுமையாக விமர்சனம் எழுந்தது. உங்களுக்கெல்லாம் ஒரு குழந்தை தேவையா என்று நெட்டிசன்கள், என்ன நடந்தது என்பதை கூட யோசிக்காமல் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த தாய் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடிகை கல்யாணி ’மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது என்றும் பச்சாதாபம் இறந்து கொண்டிருக்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் அம்மா தற்கொலை செய்து கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், ஏற்கனவே அவர் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், குழந்தையை அவர் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை, நீ எல்லாம் ஒரு அம்மாவா? என்று அவர் மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்கள்.

இது ஒரு விபத்து வேண்டும், எந்த தாயாவது தன்னுடைய குழந்தையை ஆபத்தை உண்டாக்கும் வகையில் செய்வார்களா? இந்த அடிப்படை உண்மையை கூட புரிந்துகொள்ளாமல் அவருடைய மனதை காயப்படுத்தும் வகையில் சமூக வலைதள பயனாளிகள் விமர்சனம் செய்தனர். இப்போது அந்த தாய் ஒரு மோசமான முடிவை எடுத்துள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை யாராவது யோசித்தீர்களா? தயவு செய்து உதவி செய்யவில்லை என்றாலும் அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள்’ என்று வெளுத்து வாங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement