• Dec 29 2024

பயங்கர பேய் படம்னா இதுதான்டா... 100 கோடி ஹிட் அடித்ததா அரண்மணை 4? வெளியான விபரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்த வருடம் தமிழ் சினிமாவில் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் அரண்மனை 4. இந்த திரைப்படம் கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியானது. 

அவருடன் நடிகை தமன்னா, ராசி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், அவர் திடீரென வெளியேறியதால் அவருக்கு பதிலாக சுந்தர் சியே நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதுவரை வெளியான அரண்மனை மூன்று பாகங்களையும் விட இந்த நான்காவது பாகம் காமெடியிலும், ஹாரர் காட்சிகளிலும் கலக்கி இருந்தது. இதனாலேயே தியேட்டர்களில் ஏராளமான ரசிகர்கள்அலைமோதி வந்தார்கள்.


இந்த நிலையில், அரண்மணை நான்காம் பாகம் இதுவரையில் வசூல் ரீதியாக வசூலித்த விபரம் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படம் உலக அளவில் 80 கோடி ரூபாய் வரையில்  வசூலித்துள்ளதாம். பத்து நாட்களுக்குள்ளையே இந்த படம் 50 கோடிய கடந்த நிலையில், தற்போது 18 நாட்களில் 80 கோடியை அடைந்துள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடியை வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.







Advertisement

Advertisement