• Dec 26 2024

ஏன் இப்படி பண்றீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. வீடியோ எடுத்த நபரை அதட்டிய நடிகை கனகா..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல், திரையுலகில் இருந்து விலகி இருக்கும் நடிகை கனகா குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவரது வீட்டின் முன் யூடியூபர் ஒருவர் அவரை வீடியோ எடுத்த போது ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள், என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று நடிகை கனகா அதட்டியதாக கூறப்படுகிறது. 

ராமராஜன் நடித்த ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான கனகா அதன்பின் ’தங்கமான ராசா’ ’பெரிய இடத்துப் பிள்ளை’ ’அதிசய பிறவி’’துர்கா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அவர் கடைசியாக கடந்த 2000 ஆண்டு ’நரசிம்மம்’ என்ற மலையாள படத்தில் நடித்த பிறகு 20 ஆண்டுகளுக்கு மேல் திரை உலகில் நடிக்கவில்லை என்பதும் மீடியா பக்கமும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை கனகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை கவனிக்க ஆள் இல்லாமல் இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது யூடியூப் ஒருவர் அவரை வீடியோ எடுத்துள்ளார். அப்போது என்னை ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது உங்களிடம் ஒரு பேட்டி கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்

அதற்கு கனகா, ‘நான் என்ன ஆஸ்கார் விருது வாங்கிய நடிகையா? என்னிடம் ஏன் பேட்டி எடுக்க வேண்டும், என்னை தனியாக இருக்க விடுங்கள், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று அந்த யூடியூபரை அதட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தற்போது தான் நிம்மதியாக இருக்கும் கனகாவை மீடியாக்காரர்கள் தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என்று இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement