• Dec 26 2024

நீ தப்பா பொறந்த ஒரு புரோக்கர் பயல்.. நெட்டிசன் மீது ஆவேசமான நடிகை கஸ்தூரி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தன்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவரை நடிகை கஸ்தூரி ’நீ தப்பாக பிறந்த ஒரு புரோக்கர் பயல் என்றும் நீ உன் மனைவியை விற்று வயிறு வளர்ப்பவன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெட்டிசன் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தேனியில் உள்ள ஓட்டல் பார் ஒன்றில் உன்னை பிரபலம் ஒருவருடன் பார்த்தேன், அது குறித்த வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்திருந்தார். 

இதையடுத்து நடிகை கஸ்தூரி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’எனக்கு மது பழக்கம் உண்டு என்று நிரூபித்தால் நீ வீரன், உன் தாய் உன்னை ஒருவனுக்கு பெற்றெடுத்ததாக அர்த்தம், இல்லை என்றால்... என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனை அடுத்து ’நீ உன் குற்றச்சாட்டை முதலில் நிரூபி, இப்படி உதார் விட்டுக்கொண்டு எதையும் புடுங்கலைனா வையேன், அப்போ நீ தப்பா பிறந்த புரோக்கர் பயல், மனைவியை விட்டு வயிறு பிழைப்பவன் என்று ஊரு முடிவு கட்டும். அந்த நல்ல மனிதர் இப்போது எங்கே உள்ளார் என்ன செய்கிறார் என்று நானே தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கஸ்தூரி கூறியுள்ளார். 

அது மட்டும் இன்றி இந்த கருத்தை பதிவிடும் நீ யார்? உன்னுடைய நிஜ அடையாளம் என்ன? என்பதை சொல். மொட்டை கடுதாசி போட்டு பிரபலமாக நினைக்காதே என்றும் பதிவு செய்துள்ளார். 

நடிகை கஸ்தூரியின் இந்த பதிவும் அந்த நெட்டிசன் பதிவும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ட்விட்டர் பயனாளிகளும் இதற்கு இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement