• Dec 26 2024

18 வயது பள்ளி மாணவி போல்.. ரெட்டை ஜடையுடன் சின்ன பொண்ணாகவே மாறிய மீனா.. !

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை மீனா 18 வயது குமரி போல இரட்டை ஜடை போட்டு கொண்டு தனது தோழியுடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ள பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை மீனா என்பதும் திருமணத்திற்கு பின்னர் கூட அவர் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது கணவர் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அவர் கடும் அதிர்ச்சியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் அவருக்கு இருந்த நெருங்கிய தோழிகள் அவரை சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுத்த நிலையில் தற்போது தான் மீனா இயல்பு நிலைக்கு திரும்பி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீனாவுக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் நடிகை சங்கீதாவுடன் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் இருவரும் ரெட்டை ஜடை போட்டு 18 வயது குமரி போல் காட்சி அளிப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிறு வயது முதல் நாங்கள்  தோழிகளாக இருந்தோம் ,பள்ளியில் ஒன்றாக படித்தோம், அந்த ஞாபகத்தை மீண்டும் வரவழைத்துக் கொள்வதற்காக இந்த பதிவு’ என்று குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் மீனா எப்படி இருந்தாரோ அதே போன்று இளமையாக இருக்கிறார் என்றும் அவர் என்றும் இதே போல் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement