• Dec 25 2024

ஒரு நைட்டுக்கு பல ஆயிரம் செலவு! நடிகை பூஜா ஹெக்டே! இதுக்கா இப்படி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

முகமூடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். தற்போது, தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். 


இந்நிலையில், பூஜா ஹெக்டே அவரது 34 -வது பிறந்தநாளை கொண்டாட இலங்கையில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டான Wild Coast Tented Lodge என்ற இடத்தில் அவருக்கு பிடித்தது போன்று பொழுதை கழித்துள்ளார். இந்த ரிசார்ட் முற்றிலும் மூங்கிலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகிய சுற்றுப்புறங்கள், அமைதியான சூழ்நிலை, ஸ்பாவில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் என அந்த இடத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. 


இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. பெரும் சிறப்பம்சத்துடன் இருக்கும் இந்த ரிசார்ட்டில் ஓர் இரவை கழிப்பதற்கு மட்டுமே ரூ. 65,000 ரூபாய் முதல் ரூ. 75,000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. அந்த வகையில், பூஜா ஹெக்டே ஒரே ஒரு இரவுக்கு ரூ. 70,000 செலவு செய்து அதில் தங்கியுள்ளார்.    




Advertisement

Advertisement