நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதில் அவர், 20-களில் இருந்தபோது உடல் தோற்றத்தின் பொலிவிற்கும், வெளிப்புற அழகிற்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் 30-களில் காலடி எடுத்து வைத்த பிறகு, ஆரோக்கியமாகவும் மனநிறைவுடனும் உணர்வதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல பெண்கள் ஆபத்தான “கிராஷ் டயட்” முறைகளை பின்பற்றுவது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது உடல்நலத்திற்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
அதற்கு பதிலாக, சத்தான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டு, உடலுக்கு தேவையான ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தனது உடற்பயிற்சியாளர் குல்தீப் சேத்தி உடன் இணைந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ மூலம், பெண்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், தங்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற முக்கியமான செய்தியை நடிகை ராஷி கண்ணா வலியுறுத்தியுள்ளார்.
Listen News!