• Dec 27 2024

ரவிக்கு கிடைத்த பனிஷ்மென்ட்.. ஸ்ருதியை பிரிக்க ஸ்கெட்ச் போடும் ஸ்ருதி அம்மா? நடுத்தெருவுக்கு வந்த முத்து?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கார் செட்டுக்கு முத்து போகும் போது  எல்லோரும் கவலையா இருக்காங்க. என்ன நடந்தது என முத்து கேட்க,  உன்னால தான் இவ்வளவு  பிரச்சனை நடந்துச்சு, சிட்டி முழு காசையும் கேக்கிறான். இல்லனா காரை தூக்குவான், நாங்க என்ன பண்ணுவோம் என புலம்பி கொண்டு இருக்கிறார்கள் .

இதை தொடர்ந்து முத்து சிட்டியின் ஆபீஸ்க்கு சென்று, எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை. உன்னால தான் சத்யா இந்த நிலைமையில் இருக்கான். அவனை நீ தான் கெடுதிட்டா அப்படி என்று முத்து திட்ட,

நீ என்னை எல்லாம் முன்னாடிம்  அசிங்கப்படுத்திட்டா. என்ட  தொழிலைலே  இது தான். இப்போ எல்லாருக்கும் என் மேல் இருக்க பயம் போயிட்டு. அதனால நீ எல்லாரும் முன்னாடியும் என் கால்ல விழு.அதுக்கு பிறகு உன் பிரெண்ட்ஸ் இருக்கிற பக்கமே வரமாட்டேன் அப்படி என்று சொல்லி அனுப்புகிறார் சிட்டி.


மறுபக்கம், ஸ்ருதி ரவிக்கு கொடுத்த பனிஷ்மென்ட் இன் படி ஸ்ருதியை  சைக்கிளில் வைத்து செல்கிறார் ரவி.  கொஞ்ச தூரம் சென்றதும் ஸ்ருதி உன்ட வெயிட்ட குறை என்று கிண்டலடிக்க,  உனக்கு பைக் ஓட்டவே தெரியாது என்று சொல்லி ரவியை பின்னால் வைத்து சைக்கிள் மிதித்து செல்கிறார் ஸ்ருதி.

அந்த நேரத்தில் காரில் ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் வர, ஸ்ருதி சைக்கிளில் செல்வதை பார்த்து ஸ்ருதியின் அப்பா திட்டுகிறார். நல்ல பையன் என்று தானே சொன்னா, ஆனா அதுக்குள்ள இவ்வளவு கஷ்டம் வந்துட்டா, அப்படி என்று ஸ்ருதியின் அம்மாவிடம் பேசுகிறார்.

அதற்கு, ரவி நல்ல பையன் தான். என்ன ஆச்சு என்று தெரியல. அவனை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கணும் என்று சொல்லிவிட்டு போகிறார்.

இதை தொடர்ந்து சிட்டியின் ஆட்கள் காரை தூக்குவதற்காக கார் செட்க்கு செல்ல, அங்கு முத்து வருகிறார்.

அதை பார்த்த சிட்டி, வா வந்து கால்ல விழு என சொல்ல, முத்து கொஞ்சம் பின்னால் சென்று  ஓங்கி  அடிச்சன்னா தெரியும், நெஞ்சு எலும்பு எல்லாம் உடைஞ்சிடும் என திட்டுகிறார்.

அப்படி என்று முத்து சிட்டிக்கு பேசி விட்டு எல்லாருடைய கடனையும் அடைகிறார் முத்து. அதனை செல்வம் வீடியோவாக எடுத்து வைக்கிறார்.

இதை அடுத்து இதில் மூன்று நான்கு லட்சம் வரை இருக்கும். உனக்கு இவ்வளவு காசு எப்படி வந்தது என்று செல்வம் கேட்க, காரை வித்திட்டேன் என்கிறார் முத்து. இது தான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement