நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தன்னுடைய நெடுநாள் காதலரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக சினிமாவில் நுழைந்து இப்போது முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். இணையத்தில் பயங்கரமாக ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன்னுடைய பாலோவர்ஸ்களாக மாற்றி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு "என்னுடைய சிறுவயது நண்பர்கள் முதல் ஆத்ம தோழர்கள் வரை, கோவன் வானத்தின் கீழ் காதல் மற்றும் மலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும் 'என்றென்றும்' என்றானோம்" என்று பகிர்ந்து இருக்கிறார். இந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்வதுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!