• Apr 04 2025

நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல...! - நீண்ட நாட்களுக்குப் பின் வெளியான உண்மை!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகை செளந்தர்யாவின் மரணம் தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் படி, இவரது மரணம் விபத்தாகக் கூற முடியாது என்று சிட்டிமல்லு வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செளந்தர்யா மறைவுக்கு பின் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தொடர்பாக இத்தகைய கருத்துக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

செளந்தர்யாவின் மரணம் தொடர்பான விசாரணை முடிந்த பின்னரும் பல கேள்விகள் எழுந்துள்ளன. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி செளந்தர்யா தனது கணவருடன் தனியார் விமானத்தில் பயணித்த போது, அந்த விமானம் குறுகிய நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் செளந்தர்யா உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.


அவரது மரணம் ஒரு சோகமான விபத்து என கூறப்பட்டாலும், சிலர் இது சாதாரண விபத்து இல்லை என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்துள்ளனர். தற்போது சிட்டிமல்லு அவரின் மரணம் குறித்து "விபத்து அல்ல, வேறு காரணம் இருக்கலாம்" எனக் கூறியுள்ள தகவல் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு கொடுத்த புகாரில் "செளந்தர்யாவின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாக்கும் இடையில் நடந்த பிரச்சனை தான் காரணம்" எனக்கூறியுள்ளார். மேலும், "அவரது மரணம் விபத்தாக மட்டுமே பார்க்க முடியாது. அதற்குள் மறைந்திருக்கும் உண்மை ஒன்று இருக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement