பிரபல நடிகை திர்ஷா பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் டோவிே தாமஸுடன் இணைந்து 'ஐடென்டிட்டி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசான நிலையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நடிகை திர்ஷா பேசியவை வைரலாகி வருகிறது.
நடிகர் டோவிே தாமஸ் நடிகை திர்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஐடென்டிட்டி திரைப்படம் கடந்த இரண்டாம் திகதி ரிலீசானது. இந்த படத்தில் ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகின்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை திர்ஷா மலையாளம் சினிமா குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் " ரொம்ப நாள் கழிச்சி உங்களை பார்க்கிறேன். மீடியா குழுமங்களுக்கு நன்றி. தமிழ் சினிமா எவ்வளவு முக்கியமோ அதேபோல மலையாள சினிமா மீது எப்போகும் ஒரு மரியாதை இருக்கிறது. மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஒரு வருடத்தில் எப்படியாவது ஒரு மலையாள படத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இப்போதுதான் நடித்திருக்கிறேன்" என்று நெகழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா. தற்போது அஜித்குடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்சி்' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையே இவர் நடிப்பில் ஐடென்டிட்டி திரைப்படம் கடந்த 2ஆம் திகதி வெளியாகி ரசிகர்களின் பாராட்டினை பெற்று வருகிறது.
Listen News!