• Dec 26 2024

லியோ படத்திற்கு பிறகு சம்பளத்தை படுவேகமாக உயர்ந்திய நடிகை த்ரிஷா- இத்தனை கோடி வாங்குகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார்.இதனைனத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார்.

இவர் இறுதியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார்.லியோ படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி பல படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.


விஜய் மட்டுமின்றி, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் போன்ற படங்களிலும் த்ரிஷா நடித்து வருகின்றார்.இந்த நிலையில் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி த்ரிஷா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகின்றது.


எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. மேலும் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது.தமிழ் படங்கள் தவிர ராம் என்ற மலையாள படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார். மேலும் இந்த ஆண்டு ஓடிடி தளத்திலும் த்ரிஷா அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement