தமிழ் சினிமாவில் பல சமூக விழிப்புணர்வு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் சமுத்திரக்கனி தனது படங்கள் மூலமாக பல அறிவுரைகளை மக்களுக்கு எடுத்து சொல்வது வழக்கம் மற்றும் இவர் இயக்கியுள்ள நிமிர்ந்து நில் ,நாடோடிகள் ,அப்பா போன்ற படங்களுக்கும் சமூகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் மாணவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். இவர்"போனை பேசிறதுக்கே மட்டுமே பயன்படுத்துங்கள். போன் தற்போது ஒரு வியாதியாக மாறிவிட்டது. முன்னாடி நம்ம அம்மா, அப்பா வாரத்திற்கு ஒரு நாள் விரதம் இருப்பார்கள். அது போல, வாரத்துக்கு ஒரு நாள் 'போன் Fasting' (போன் விரதம்) வைச்சு போனே தொடமாட்டேன், போனை பார்க்கமாட்டேன் என்று தீர்மானியுங்கள்." என கூறியுள்ளார்.
இன்று போன்கள் மாணவர்களுக்கு ஒரு முக்கிய பொழுதுபோக்கு மற்றும் தொடர்பு கருவியாக மாறிவிட்ட நிலையில் சமுத்திரக்கனி அவர்களின் இந்த அறிவுரை சிறந்தது என சமூக ஊடகங்களில் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்."இந்த போன் Fasting மூலம் மாணவர்கள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் மேலும் அப்படியே சந்தோஷமாகவும் இருப்பார்கள்" என்றார் சமுத்திரக்கனி அவரின் கருத்துக்களை மாணவர்களிடம் நேர்காணல் ஒன்றில் வழங்கியுள்ளார்.
Listen News!