• Dec 26 2024

துல்கர் சல்மான், ஜெயம் ரவியை அடுத்து இன்னொரு நடிகரும் விலகல்.. ‘தக்லைஃப்’-இல் கமல் மட்டும் தான் இருப்பாரா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்னொரு முக்கிய நடிகரும் விலகி இருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த படத்தில் கமல் மட்டும் தான் இருப்பாரா என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

தான் கொடுத்த கால்ஷியீட்டின் பெரும் பகுதியை வீணடித்து விட்டதாக துல்கர் சல்மான் ‘தக்லைஃப்’ படத்திலிருந்து விலகிய நிலையில் அதே காரணத்தை கூறி ஜெயம் ரவியும் விலகினார். இதனை அடுத்து துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு, ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் மேற்கண்ட இருவர் கூறிய அதே காரணத்தை கூறி தற்போது நடிகர் சித்தார்த் ‘தக்லைஃப்’ படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. மணிரத்னம் அவர்களை தனது குரு போல் சித்தார்த்தை நினைத்து வரும் நிலையில் வருமானம் என்று வந்து விட்டால் குரு என்றும் பாராமல் அவருடைய படத்திலிருந்து சித்தார்த் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த் தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் இனியும் தன்னுடைய கால்ஷீட்டை வீணாக்க முடியாது என்று முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சித்தார்த், ‘தக்லைஃப்’ படத்திலிருந்து விலகியதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒவ்வொருவராக ‘தக்லைஃப்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டே இருந்தால் கமல்தான் எல்லா கேரக்டர்களிலும் ’தசாவதாரம்’ போல் நடிக்க வேண்டும் என கேலி செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement