• Dec 26 2024

ஷபானாவை தொடர்ந்து சன் டிவி சீரியலில் இருந்து விலகிய ஹீரோ! எங்கையோ இடிக்குதே..!!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. அதிலும் சன் டிவியில் ஒரு சீரியல் நடித்து விட்டாலே போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து விடுவார்கள். இதற்காகத்தான் பல நடிகர்கள் போட்டி போட்டு நடித்துக் கொண்டுள்ளார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆரம்பிக்கப்பட்ட மலர் சீரியலில் கதாநாயகனாக அக்னி நடிக்க, கதாநாயகியாக பிரீத்தி ஷர்மா நடித்த வருகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் அக்னி.


செம்பருத்தி சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்த நிலையில், அவர் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிறகு அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் அக்னி. அதன் பின்பு அந்த சீரியல் முடிவு வரைக்கும் அவர் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் மலர் சீரியலில் கதாநாயகனாக நடிப்பதற்கு அக்னி ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது மலர் சீரியல் இருந்து நடிகர் அக்னி  விலகியதும், மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து ஷபானா விலகியதும் பேசுபொருளாகி உள்ளது.


கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியலில் அறிமுகமாகி தற்போது சன் டிவி மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்து ஷபானாவும் விலகி இருந்த நிலையில், மலர் சீரியல் நடித்து வந்த அக்னியும் விலகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement