• Dec 26 2024

பிரபல நடிகையுடன் ‘குக் வித் கோமாளி’ தர்ஷன் திருமணமா? புகைப்படம் வைரலானதால் பரபரப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் தர்ஷன் அதன் பின் சில திரைப்படங்களின் நடித்தார் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உள்பட ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்தது. மேலும் தற்போது கூட சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக தர்ஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’நேரம்’ உள்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த அஞ்சு குரியன் என்ற நடிகையை தர்ஷன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டதோடு திருமண புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து தர்ஷன் - அஞ்சுகுரியன் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இது ஒரிஜினல் திருமணம் அல்ல, ஒரு விளம்பர படத்திற்காக தயாரிக்கப்பட்ட திருமணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தான் பிக் பாஸ் முருகதாஸ் ஒரு திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை முட்டாள் ஆக்கிய நிலையில் தற்போது தர்ஷன் - அஞ்சு குரியன் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஒரு விளையாட்டு விஷயம் இல்லை, ஒரிஜினல் திருமணம் என்றால் மட்டும் புகைப்படத்தை வெளியிடுங்கள், அல்லது இது ஒரு விளம்பர புகைப்படம் என்று பதிவு செய்யலாம், அதை விட்டுவிட்டு மொட்டையாக திருமண புகைப்படத்தையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement