• Dec 26 2024

சன் டிவிக்கு மாறியதும் நடிகை ஸ்வாதிக்கு சுழட்டியடிக்கும் அதிஷ்டம்! விபரம் உள்ளே..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஸ்வாதி கொண்டே. இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்பு தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு வித்தியாசமான கதை களத்துடன் ஒளிபரப்பான சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 500 எபிசோட்டுகளுடன் முடிவுக்கு வந்தது. இதன் இரண்டாவது பாகம் 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சீரியலில் ஸ்வாதி கொண்டே, கேப்ரெல்லா, திரவியம், சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி மற்றும் அக்கா தங்கைக்கு இடையிலான காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டது. இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனாலும் கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

d_i_a

இதை தொடர்ந்து இதில் நடித்த ஸ்வாதி கொண்டேக்கு நடிகர் கார்த்திக்கின் 27 ஆவது படமான மெய்யழகன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அந்த படத்தில் இவருடைய நடிப்பு பிரமிக்க வைத்திருந்தது. பலரும் இவரது நடிப்பை பார்த்து பாராட்டி இருந்தார்கள்.


இதை தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  மூன்று முடிச்சு என்ற சீரியலில் ஸ்வாதி நந்தினி என்ற ரோலில் நடித்து வருகின்றார். கிராமத்து கதை அம்சத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் ஐந்து இடத்திற்குள் தவறாமல் இருந்து வருகின்றது.

இந்த நிலையில், சீரியல் நடிகையான ஸ்வாதி கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது அவர் சொந்தமாகவே கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய வளர்ச்சியை கண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement