விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் இயக்குநர் ஷங்கரரின் மகள் நடிப்பில் உருவாகியுள்ள 'நேசிப்பாயா'. இந்த படத்தின் ஆடியோ லஞ்ச் நிகழ்வில் பேசிய அதர்வா அப்பாக்கு, எனக்கு கொடுத்த சப்போட் என் தம்பிக்கும் கொடுங்க என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய அதர்வா, " என்னுடைய அப்பா ரசிகர்கள், என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம் அண்ட் ரொம்ப நன்றி இதுவரைக்கும் சப்போட் பண்ணுறதுக்கு. என்னுடைய தம்பி ஆகாஷ் நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதிதிக்கும் இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திற்கு நடந்த ஒரு நல்ல விஷயம் என் தம்பிக்கும் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் யுவன் சாரின் இசைதான். இந்த விழாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றிகள் என்று கூறினார்
மேலும் "என்னுடைய அப்பா இறந்த அந்த ஒரு நாள் இரவில் எங்கள் மூன்று பேரின் வாழும் இருண்டு போய்விட்டது. அதன் பிறகு எங்கள் அம்மாதான் எங்களை வழிநடத்தினார். அவர்கள் வாயால் என் தம்பிக்கு இந்த மேடையில் வாழ்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்" என்று அம்மாவை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவிக்க வைத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " இந்த மேடையில கடைசியா ஒன்னு சொல்லணும் ஆகாஷிற்கு வாழ்த்துக்கள் ஆகாஷ். கப்பு முக்கியம்டா தம்பி. ரொம்ப முக்கியம் பார்த்துச் செய்" என்று கலகலப்பாக வாழ்த்தி நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
Listen News!