• Dec 25 2024

விஜய் பக்கத்துல நான் தான்.. த்ரிஷா, ரம்பாவின் போட்டியோ போட்டி..

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் வீடு இருக்கும் நீலாங்கரை வீடு அருகே நடிக்க த்ரிஷா, ஒரு வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தளபதி விஜய் அலுவலகம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நடிகை ரம்பா வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் நடிகர் விஜய் ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டை வாங்கினார் என்றும் அதைத்தான் தற்போது அவர் புதிய அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நான் தளபதி விஜய் அலுவலகம் இருக்கும் அதே அபார்ட்மெண்டில் தான் நடிகை ரம்பா சொந்த வீடு வாங்கி உள்ளார். அவர் கணவர் சென்னையில் சில பிசினஸ்கள் செய்ய இருக்கும் நிலையில் அவ்வப்போது வந்து தங்கி செல்வதற்காக இந்த வீட்டை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ரம்பாவின் கணவர் இந்த வீட்டை வாங்கிய பிறகுதான் அதே அபார்ட்மெண்டில் விஜய்யின் அலுவலகமும் இருக்கிறது என்பது தெரிந்து, அதன் பின்னர் தான் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மரியாதை நிமித்தமாக விஜய்யை சந்தித்தார் என்பதும் இது குறித்த புகைப்படம் மூலம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய்யின் வீடு அருகே நடிகை த்ரிஷா வீடு வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய்யின் அலுவலகம் அருகே நடிகை ரம்பாவும் வீடு வாங்கி இருப்பது குறித்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement