• Apr 19 2026

காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை.. வெளியானது ‘கன்னக்குழியா’ பாடலின் புரோமோ வீடியோ.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் உதவியாளரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘ஹாய்’ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தை 7 Screen Studio மற்றும் Rowdy Pictures இணைந்து தயாரித்து வருகின்றன.

வயதில் இளையவன், தன்னைவிட மூத்த பெண்ணை காதலிக்கும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம், இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையின் புதுமையும், உணர்ச்சி கலந்த காட்சிகளும் இந்த படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், ‘ஹாய்’ திரைப்படத்தின் ‘கன்னக்குழியா’ பாடல் புரோமோ தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடலின் இசை, காட்சிப்படுத்தல் மற்றும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும், இந்த பாடலின் முழு வீடியோ ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மே மாதத்தில் வெளியாக உள்ள இந்த படம், இளைஞர்களின் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருப்பதால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement