• May 22 2026

கூஸ்பம்ப்ஸ் கேரண்டி.! காஞ்சனா 4-க்கு ஹைப் ஏற்றிய ராகவா லாரன்ஸ்.! வெளியானது புதிய போஸ்டர்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திகில் படங்களின் முகமாக திகழும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் காஞ்சனா 4 தொடர்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். நோரா படேஹி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் ஆனந்த் ராஜ், கருடராம், ஹிமா பிந்து, ஸ்வாக்‌ஷா ஐயர், தேவ தர்ஷினி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011ல் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.  குறிப்பாக அதில் சரத்குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. 


அதைத் தொடர்ந்து வெளியான காஞ்சனா 2 வணிக ரீதியில்  வெற்றியடைந்தது. அதன்பின் 2019ல் வெளியான காஞ்சனா 3 கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வெற்றிப்படமானது. இப்போது காஞ்சனா 4 ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சனா 4  படத்திற்கான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் மந்திரவாதியாகவும் கட்டுக்கோப்பான வீரனாகவும் பல முகங்களுடன் காட்சியளிக்கிறார்.

மேலும் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட போஸ்டரோடு "Feel the Real Combination of Fear and Goosebumps of Kanchana4, Blood-Curdling Musics and Exclusive updates Coming soon" என்றும்  பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement