• Dec 25 2024

பிரபல நடிகரால் ரொம்பவே கஸ்டப்பட்ட ஐஸ்வர்யா ராய் ..இவருக்கு இப்படியொரு நிலைமையா? அவரே சொல்லி புலம்பிய தகவல்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராய் நவம்பர் 1, 1973 இல் கர்நாடக மாநிலத்தில் பிறந்திருக்காங்க.இப்போ இவங்களுக்கு வயது 49.இவன்களுடைய அம்மா பிருந்தா  ,அப்பா கிருஸ்ணராஜ் ,ஆதித்யா ராய் என பிரதரும் இருக்காங்க.சிறிது காலத்திற்குப் பிறகு மும்பையில் வந்து செட்டில் ஆயிட்டாங்க.ஐஸ்வர்யா ராய் படித்ததெல்லாம் மும்பை தான்.

இவங்க ரொம்ப கஷ்டப்பட்டு டாக்டர் ஆகணும் என்று படிச்சாங்கஅதுக்கப்புறம் திடீரென்று ஆர்கிரெக் ஆகணும்னு சொல்லி பிளான் பண்ணி ஆர்கிடெக் காலேஜ்ல தான் படிச்சாங்க, ஆனா அதையும் கடைசியில் ரோ ப் பண்ணிட்டு  மாடலிங்கில் இன்ட்ரெஸ்ட் வந்ததால அந்த கேரியருக்குள் நுழைஞ்சிட்டாங்க இதனை 1991 ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் அறிமுகம் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.1994 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா ராயின் அழகு உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்டது - "மிஸ் வேர்ல்டு" பட்டத்தை வென்றார்.இதுக்கப்புறம் ஆக்டிங் கேரியருக்கு நுழைஞ்சி இருக்காங்க மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் 1997 இல் ரிலீஸ் ஆகிச்சு.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சங்கர் ஜீன்ஸ் படத்தில் இவரை நடிக்க வைத்தார் இந்த திரைப்படம் தமிழில் எந்த அளவுக்குஹிட் ஆனது என்று நம்ம எல்லோருக்குமே தெரியும்.இந்தத் திரைப்படம் தான் ஐஸ்வர்யா ராய்  கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.ஹிந்தி தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராவணன் எந்திரன் தற்போது பொன்னியின் செல்வன் 1, 2 ஆகியன இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் ஆகும்.

பாலிவோட்டில் சல்மான் கானுக்கு ஜோடி போட்டு நடித்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்து பிரேக் அப் ஆனது.இதற்கு என்ன காரணம் என்றால் சல்மான்கான் ரொம்ப தேவையில்லாத விஷயங்களை பேசுறது பப்ளிக் பிளேஸில் அப்யூஸ்ட் பண்றது இந்த மாதிரியான பல அசிங்கங்களை பண்ணிக்கிட்டு இருந்தாரு அதனாலதான் இந்த ரிலேஷன்ஷிப் எனக்கு செட் ஆகாது அதனால விலகிட்டேன் அப்படின்னு ஐஸ்வர்யா ராய் சொல்லிருக்காங்க.நிறைய இடங்களில் நான் செய்த பெரிய தப்பு இதுதான் என்று நிறைய தடவை சொல்லி இருக்காங்க அதன் பிறகு தூம் 3 நடிக்கும் போது தான் அபிஷேக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவங்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்காங்க. இவர்கள் இருவருக்குமிடையில் விவாகரத்து பிரச்சனைகளும் இருக்கிறதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement