• Dec 26 2024

63 வயது நடிகருக்கு மனைவியாகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 63 வயது நடிகருக்கு ஒரு திரைப்படத்தில் மனைவியாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டர் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து அவர் ’பண்ணையாரும் பத்மினியும்’ ’திருடன் போலீஸ்’ ’மனிதன்’ ’தர்மதுரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பதும் சமீபத்தில் அவரது நடிப்பில் ’டிரைவர் ஜமுனா’ ’ரன் பேபி ரன்’ ’சொப்பன சுந்தரி ’உள்ளிட்ட சில படங்கள் வெளியானது என்பது தெரிந்தது.

மேலும் அவர் தற்போது ஏழு படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பதும் இவற்றில் நான்கு படங்கள் தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தில் வெங்கடேஷ் ஹீரோ என்றும் கூறப்படுகிறது.



வெங்கடேஷ்க்கு தற்போது 63 வயதாகும் நிலையில் 34 வயது ஐஸ்வர்யா ராஜேஷ், அதாவது கிட்டத்தட்ட பாதி வயதில் உள்ளவர் மனைவியாக நடிக்கவுள்ளார் என்று செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

63 வயது நடிகருக்கு ஜோடியாக நடிப்பதா? என ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், கமல், ரஜினி, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்டோர் 60 வயது கடந்தவர்கள் தான் என்றும் ஆனால் அவர்களுக்கும் இளவயது நடிகைகள் தான் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்றும், சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்றும், ஐஸ்வர்யா, வெங்கடேஷ் ஜோடியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று ரசிகர்கள் இன்னொரு புறம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement