• Dec 26 2024

’லால் சலாம்’ படத்தில் அப்பாவ நடிக்க வச்சிருக்க கூடாது.. புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தை சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியிட்ட நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் படுதோல்வி அடைந்தது அவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதாம். 

இந்த படத்தில் மத நல்லிணக்கம் மற்றும் பல நல்ல விஷயங்கள் கூறியபோதிலும் தனது அப்பா ரஜினியை நடிக்க வைத்ததால் இந்த படம் வேற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால் நான் சொல்ல வந்த கருத்து மக்களிடம் செல்லாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 



தனது முந்தைய படங்களான ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய படங்களில், தான் சொல்ல வந்த கருத்து மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததாகவும் அதற்கு காரணம் அந்த படத்தில் தான் அப்பாவை பயன்படுத்தாதது தான் என்றும் இந்த படத்தில் அப்பாவை நடிக்க வைத்ததால் இந்த படம் ரஜினி படமாக மாறிவிட்டது என்றும் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மொய்தின் பாய் கேரக்டரில் அப்பாவுக்கு பதிலாக வேறொரு பிரபலம் இல்லாத நடிகரை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'லால் சலாம்’ படம் வெற்றி பெற்று இருக்கும் என்றும் இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் ரஜினியிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து அதன்பின் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் இந்த படத்தில் நான் அப்பாவை நடிக்க வைத்திருக்க கூடாது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக தெரிகிறது. 

‘வை ராஜா வை’ படத்தில் தனுஷ் கடைசி சில காட்சிகளில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்து படத்தை நிறைவு செய்திருப்பார், அதுமட்டுமின்றி தனுஷ் நடித்ததை சஸ்பென்ஸாக வைத்திருந்தோம், அது போல் ஒரு சில காட்சிகளில் மட்டும் கிளைமாக்ஸில் அப்பாவை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களில் அவரை பயன்படுத்தியது தனது தவறுதான் என்றும் ஐஸ்வர்யா தற்போது புலம்பி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


Advertisement

Advertisement