• Dec 25 2024

விடாமுயற்சி லேட் ரஜனி-கமல் தான் காரணமா? லைகா மீது உச்சகட்ட கோபத்தில் அஜித்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி.  இந்த திரைப்படத்தின் வருகைக்காகவும் அப்டேட்காகவும் ரசிகர்கள் கடுமையாக தவமிருக்கிறார்கள். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரோனால்ட் ட்ரம்ப் இடம் கூட டுவிட்டரில் ரசிகர்கள் வியாமுயற்சி  அப்டேட் கேட்டனர். இந்த விடையம் கொஞ்ச நாட்களாக வைரலாகி வந்தது. 


வேட்டையன், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களை ஒரே நேரத்தில் லைகா தயாரித்து வந்த நிலையில், பைனான்ஸ் காரணமாக சில நாட்களுக்கு ஷூட்டிங் நடக்கவேயில்லை. அப்போதே அஜித் கடுப்பானார். அதேபோல் சில மாதங்களில் முடிக்க வேண்டிய விடாமுயற்சி படம் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதால் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்களும் அடம்பிடித்து வருகின்றனர்.

d_i_a


சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. மீதமுள்ள ஷூட்டிங், போஸ்ட் புரடக்சன் பணிகள் எல்லாம் முடிந்து இப்படத்தை அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் தாமதமானதற்கு அஜித் லைகா நிறுவனம் மீது கோபத்தில் இருக்கிறாராம். 


 ’’விடாமுயற்சி படத்தின் கதையை விட விடாமுயற்சி படத்தை எடுக்க நடக்கும் கதைகள் தான் திருப்பங்கள் நிறைந்த கதையாக இருக்கிறது. மீண்டும் இதில் நடிக்க அஜித் டிசம்பரில் டேட் கொடுத்திருப்பதாகவும், ஆனால், குட் பேட் அக்லியில் பெரிய தாடியுடன் நடித்து வரும் நிலையில், விடாமுயற்சியில் அளவான தாடியும் நடிப்பதால் அப்படத்தை முடித்து விட்டுத்தான் விடாமுயற்சிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது

Advertisement

Advertisement