• Sep 17 2026

தமிழ்நாட்டில் உருவாகப் போகும் புதிய சிட்டி.. CM விஜய்யின் அறிவிப்பால் குஷியில் அஜித்குமார்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் ரேஸருமான அஜித் குமார் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸில் நீண்ட காலமாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் அஜித் குமார், இந்தியாவில் மோட்டார் ரேஸிங்கிற்கான எதிர்காலத்தை இந்தத் திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் தனது கருத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி, “One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் அஜித் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளம் தலைமுறையினர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஆர்வத்துடன் பயணிக்கவும், திறமையான வீரர்கள் சர்வதேச அளவில் உருவாகவும் இதுபோன்ற உள்கட்டமைப்பு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வரும் அஜித் குமாரின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் வகையில் இந்த சிட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement