• Dec 26 2024

அஜித், விஜய், தனுஷ் பட நடிகை திடீரென அடித்த மொட்டை! மர்மமான காரணம்? வைரலாகும் போட்டோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த பிரபல நடிகை ஒருவர் மொட்டை அடித்த புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகையான சுரேகா வாணி, தற்போது மொட்டை அடித்த தனது புகைப்படத்தைன் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதன்படி, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் வில்லன் ஜெகபதி பாபுவின் மனைவி ஆகவும், நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்ததோடு, தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்திலும் நடித்து  பிரபலமாக காணப்பட்டவர் தான் நடிகை சுரேகா வாணி.


இவர் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது மகளுடன் போட்டோ, ரிலீஸ், வீடியோக்கள் என பதிவு செய்து ஆக்டிவாக இருக்கும் நடிகை சுரேகா வாணி, தற்போது திடீரென மொட்டை அடித்த புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு சுரேகா வாணி தனது மகளுடன் திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற வீடியோவை பதிவு செய்திருந்த நிலையில் அவர் திருப்பதியில் மொட்டை அடித்திருக்க வாய்ப்பு உள்ளது.


இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தாலும், மற்றும் சிலர் மொட்டை அடித்தாலும் நீங்க  ஸ்டைலாகத்தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் சுரேகா வானியின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தற்போது அவர் தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement