• Dec 25 2024

பசிக்கிது,மொழி தெரியாது! அஜித்துக்கு ஆடு மேய்ப்பவர் சாப்பாடு போட்டாரு- சமுத்திரக்கனி

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிகர்அஜித்தின் பைக் ட்ராவலின் போது முகம் தெரியாத நபர் செய்த உதவி குறித்து அஜித் தன்னிடம் கூறியதாக சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டியில்  பகிர்ந்துள்ளார்.


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது "நடிகர் அஜித் ஒருமுறை வட மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு பைக்கில் ரைட்போய் இருக்காரு, அப்போ அவருக்கு சரியான பசி வரவும் பக்கத்துல எதாவது ஹோட்டல் இருக்கானு தேடி பார்த்து இருக்காரு எதுவுமே இல்லை, அது கிராமம் என்பதால் ஒரு சிறிய கடை கூட இல்லை.


உடனே அஜித் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பசிக்குதுனு சொல்லியிருக்காரு, அந்த நபர் அஜித்தை தன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு கொடுத்து இருக்காரு. அஜித் காசு கொடுத்தாலும் வாங்கவில்லையாம்" என்று அஜித் கூறிய சம்பவத்தை கூறினார்.


மேலும் " இப்படி தூரமா பயணம் செய்யும் போதுதான் நாங்க யாரு, இந்த உலகம் எப்படிப்பட்டதுனு தெரியும்.  இதுபோல ஒரு பயணம் பண்ணுங்க சார்" என அஜித் தன்னிடம் கூறியதாக சமுத்திரக்கனி கூறியிருக்கின்றார். அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அப்போது அஜித்திற்கும் சமுத்திரக்கனிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் அஜித் சமுத்திரக்கனியிடம் இந்த விஷயங்களை பற்றி கூறினார் என்று நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். 


Advertisement

Advertisement