• Dec 25 2024

முத்துவால் நடந்த விபரீதம்..! பிக்பாஸில் முக்கிய பகுதி ரத்து..!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்சீசன் 8 நிகழ்ச்சியிலன் இன்றைய நாள் பரபரப்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது அது தொடர்பாக பார்ப்போம். 


பிக் பாஸ் வீட்டின் 13ம் வாரத்துக்கான வீட்டின் தலைவரை தெரிவு செய்யும் "கேப்டன்சி கோல் மால் டாஸ்க்" வைக்கப்படுகிறது. அதில் வட்டத்தின் உள்ளே ஒரு பந்து  வைக்கப்பட்டிருக்கும் அந்த பந்தை மற்ற போட்டியாளரை தாண்டி வெளியே போட வேண்டும் அத்தோடு தனது வலையில் அந்த பந்து விழாமலும் பார்த்து கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் டாக்ஸ் கொடுக்கிறார். 


இதில் ஜெப்ரி, முத்து, பவித்ரா ஜனனி விளையாடுகிறார்கள். மூவரும் தீவிரமாக விளையாடும் நிலையில் முதலில் ஜெப்ரி அவுட் ஆகிறார். பின்னர் முத்து பவித்ராவிற்காக விட்டு கொடுத்து விளையாடுகிறார். இதனால் பவித்ரா வெற்றி பெறுகிறார். 


இருப்பினும் பிக் பாஸ் ஒரு அறிவிப்பை விடுகிறார். விட்டுக்கொடுத்து ஆடவேண்டும் என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். இப்படி முத்து விளையாடியதால் இந்த வார கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது. நாமினேஷன் பிரீ பாஸ் இனி ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகிறார்கள். முத்து தான் செய்த தவறை குறித்து போட்டியாளர்களிடன் சொல்லி அழுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement