• Feb 25 2025

"அனிமல்" படத்தில் நடிக்க மிஸ் பண்ணிட்டேன்... கவலைப்படும் அல்லு அர்ஜுன்.....

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் சமீபத்தில்  சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்வீர் கபூர் நடிப்பில் வெளிவந்த ‘அனிமல்’ படத்தைப் பற்றி பகிர்ந்த கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி உள்ளது.  இந்த படம், வெளியானதும் 900 கோடி வரை வசூலித்ததுடன் திரை உலகில் பெரிய சாதனையையும் படைத்தது.

‘அனிமல்’ திரைப்படத்தில் ஹீரோயினியாக, ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடம் பிடித்த  ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் படம் வெளியாகி தற்போது 1 வருடம் கடந்த பிறகு, “அனிமல்” பற்றிய எண்ணங்கள் இன்னும் பலரின் மனதில் புது உற்சாகத்தையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த திரை சாதனையைப் பற்றி அல்லு அர்ஜுன் சமீபத்தில் கதைத்தபோது, “இந்த படம் எனக்கு மிகவும் புடித்துள்ளது” என அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொண்டார். அதோடு, “அதில்  நான் நடித்திருக்கலாம்” என்றே அவர் கூறியுள்ள அந்த உரை படத்தின் வெற்றியை உணர்த்துகிறது. மேலும் அல்லு அர்ஜுனின் இந்த உரை, அவரது தனிப்பட்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. 

‘அனிமல்’ படம், வெளிவந்த 1 வருடத்தின் பின்னர், புதிய விமர்சனத்தை உருவாக்கி, திரை உலகில் நீண்ட காலம் பேசப்படும் படமாக மாறியுள்ளார். அல்லு அர்ஜுன், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் திரை கலை மீது இருக்கும் அக்கறையைக் கொண்டு, இத்தகைய படங்களை மேலும் உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement