• Feb 25 2025

"டிராகன்" படக்குழு தியட்டரில் திடீர் விசிட்! சந்தோசத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் 'டிராகன்' திரைப்படம் வெளியான முதல் நாளிலே  ரசிகர்களின் ஆர்வம் மற்றும் அக்கறை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் மூலம் படம் வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ‘டிராகன்’ படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும்  நடிகை கயாடு இருவரும்  தியேட்டர் விசிட் நடத்தி, ரசிகர்களை நேரில் சந்தித்துள்ள வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

திரையரங்குகளுக்கு நாளுக்கு நாள் கூட்டம் குவிந்து வருவதால், படம் வெளியான முதல் நாட்களிலிருந்தே ரசிகர்கள் அதன் கதை, இசை மற்றும் நடிப்பு மீதான பெரும் ஆர்வத்தைக் காட்டி வருகிறார்கள். அத்துடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து, திரைப்படத்தின் வரவேற்பு பற்றி நேரடியாக கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்து வருகிறார்.


அந்த தியேட்டர் விசிட்டின் போது  ‘டிராகன்’ படத்தின் நடிகை கயாடு, ரசிகர்களுக்கு தனது உண்மையான நன்றியை தெரிவித்தார். "என் படம் திரையரங்குகளில் பார்க்க வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவு மற்றும் அன்பு, இந்த படத்தை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது," என்ற வார்த்தைகள் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தன.

படத்தின் வெற்றி மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் கூட்டம், ‘டிராகன்’ திரைப்படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியைப் பார்த்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன் , "நாம் செய்த முயற்சிகளும் ரசிகர்களிடம் இருந்து வந்த ஆதரவும், இந்த படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்றதுடன் உங்கள் அன்பிற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைப்போம்," என்றார்.

Advertisement

Advertisement