• Dec 25 2024

சிறை மீண்ட அல்லு அர்ஜுன்; ஓடிச்சென்ற விஜய்; கட்டித்தளுவும் காட்சிகள் வைரல்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் சென்ற பெண்னொருவர் உயிரிழந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் மகன் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்பு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

d_i_a

இதைத்தொடர்ந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுத்தாக்களின் அடிப்படையில், 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமினை வழங்கியது உயர் நீதிமன்றம்.


இதையடுத்து இன்று காலை சிறையில் இருந்து விடுதலை ஆனார் அல்லு அர்ஜுன். இதன்போது அவருடைய மனைவி, குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலை ஆன அல்லு அர்ஜுனை பார்ப்பதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேரடியாகவே அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது அல்லு அர்ஜுனை அவர் கட்டித் தழுவிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement