• May 27 2026

ஆடம்பரத்தை வெறுத்த அல்லு அர்ஜுன்? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த முடிவு.! லீக்கான தகவல்கள்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் தற்போது தனது எளிமையான அணுகுமுறையால் ரசிகர்களிடையே மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். பொதுவாக முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகளுக்காக தயாரிப்பு நிறுவனங்கள் பிரைவேட் ஜெட் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளை ஏற்பாடு செய்வது வழக்கமான ஒன்று. 

குறிப்பாக,  “ராக்கா” திரைப்படத்திற்காக ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய சூழலில், நேரத்தை மிச்சப்படுத்தவும் வசதியாக இருக்கவும் தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுனுக்காக பிரைவேட் ஜெட் ஏற்பாடு செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது.


ஆனால், தயாரிப்பாளரின் செலவை தேவையின்றி அதிகரிக்க விரும்பாத அல்லு அர்ஜுன் அந்த வசதியை மரியாதையுடன் மறுத்துவிட்டாராம். அதற்கு பதிலாக சாதாரண கமர்ஷியல் விமானங்களிலேயே பயணம் செய்ய விரும்புவதாக தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்த பிறகும், தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்து நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும், “ராக்கா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் அல்லு அர்ஜுன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்து ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், அல்லு அர்ஜுனின் இந்த செயலும் அவருக்கு மேலும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. 

Advertisement

Advertisement