• Dec 25 2024

அமரன் கிளைமேக்ஸ் தான் என் வாழ்க்கை! அப்பாவால் கண் கலங்கிய SK...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். 


அமரன் வெற்றி  விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தன் அப்பா குறித்து உருக்கமாக பல விஷயங்களை பேசியுள்ளார். அதில், " நான் அமரன் படத்தில் நடித்ததற்கு மிக முக்கிய காரணம் என் அப்பா தான். அவர் ஒரு சிறை கண்காணிப்பாளராக இருந்தவர். தன் பணியில் மிகவும் நேர்மையானவராக வலம் வந்தவர். கடந்த 21 ஆண்டுகளாக அவருடைய நினைவில் மட்டும் தான் நான் வாழ்ந்து வருகிறேன். 


ஆனால் இந்த படம் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. முகுந்த் போன்று தான் என் தந்தையும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடந்தது போன்று தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. என் அம்மா மற்றும் அக்காவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த படத்தில் நடித்து அதை பூர்த்தி செய்து விட்டேன்" என்று கண்கலங்க கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement