• Oct 26 2024

வேட்டைக்கு ரெடியாகும் "வேட்டையன்"... படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் TJ ஞானவேல் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.


இந்த திரைப்படத்தில் பல முன்னனி நச்சத்திரங்கள் நடித்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றய நடிகர்கள் வாங்கிய சம்பளம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும். 


Advertisement