• Dec 27 2024

நீயெல்லாம் ஒரு ஆளு மயிரு.. நீ எனக்கு கூத்து வாத்தியாரா? அம்மு அபிராமியின் ‘ஜமா’ டீசர் ரிலீஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி  அம்மு அபிராமி நாயகி ஆக நடித்த ‘ஜமா’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் சேட்டன், அம்மு அபிராமி, மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த  டீசரில் பெண் வேடம் போட்டு கூத்தில் நடிக்கும் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை, அம்மு  அபிராமி மேல் உண்டாகும் காதல், இந்த காதலுக்கு பெற்றோர் தரப்பில் ஏற்படும் எதிர்ப்பு உள்ளிட்ட காட்சிகள் உருக வைக்கும் அளவுக்கு உள்ளது.

குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பட்டையை கிளப்பி இருக்கிறது. பல சர்வதேச விருதுகளை பெற்ற ’கூழாங்கல்’ என்ற படத்தை தயாரித்த லர்ன் அண்ட் டீச் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும், கூழாங்கல் படம் போலவே இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement