• Dec 26 2024

தனி ஆளாக நின்று எழிலுக்கு சர்ப்போட் பண்ணும் கோபி, கணேஷின் தொல்லையால் அமிர்தா எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தாவிடம் கணேஷ் நிலாப்பாப்பாவையும் கொண்டு வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட அமிர்தா என்னால இங்கிருந்து வரமுடியாது என்கின்றார். இருந்தாலும் கணேஷ் குடும்பம் அமிர்தாவை தங்களுடன் கூட்டிட்டு போவதற்காக வற்புறுத்திக் கொண்டிருக்க, எழில் என்ன செய்வதென்று தெரியாமல் மாடிப்படியில் இருந்து அழுகின்றார்.


இதனைப் பார்த்த கோபி எழிலிடம் அழாதடா என்று சமாதானப்படுத்துகின்றார்.அப்போது நிலா ஓடி வந்து அப்பா அழாதீங்க என்று சொல்ல கணேஷ் நிலா தன்னுடைய குழந்தை என பறிக்கப் பார்க்க கோபி கணேஷைப் பிடித்து அமிர்தாவுக்கு உன் கூட வர விருப்பமில்லை. நீ இங்க இருந்து போ என்கின்றார்.

அதற்கு கணேஷ் அமிர்தா இல்லாமல் போக மாட்டேன் என்று சொல்ல கோபி கணேஷின் பெற்றோருக்கு பொறுமையாக நிலமையை எடுத்துச் சொல்கின்றார். உங்க பையன் செத்து போய்ட்டான என்று அமிர்தா ஒரு புதுவாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டா, இனிமேல் அவ உங்க பைன் கூட வரமாட்டா என்று சொல்ல அவர்கள் அமிர்தா தங்களுடன் வரவேண்டும் என்று பேசுகின்றனர்.


தொடர்ந்து அமிர்தாவிடமும் கணேஷ் சென்று பேச அமிர்தா பாக்கியா பின்னாடி ஒழிய, கோபி கணேஷை திட்டுகின்றார். உனக்கு அவ்வளவு தான் மரியாதை, அமிர்தா எங்க வீட்டு மருமகள் நிலா எங்க வீட்டுக் குழந்தை இங்க தான் இருப்பாங்க. மரியாதையாக நீ இங்க இருந்து போ எனச் சொல்ல, கணேஷ் அடம்பிடித்துக் கொண்டே இருக்கின்றார்.


மேலும் அமிர்தா கணேஷின் தொல்லை தாங்காமல் மேலே போக, ராமமூர்த்தி இப்போ அமிர்தா ரொம்ப டென்சனாக இருக்கிறா, இன்னும் ஒரு வாரம் கழிச்சு இது பற்றி பேசிக்கலாம் என்று சொல்ல கணேஷ், ஒரு வாரத்திற்கு பிறகு அமிர்தா தன்னுடன் வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டு கிளம்பிப் போகின்றார். எழில் எனன செய்வதென்று தெரியாமல் கோபி மீது சாய்ந்து அழுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement