• Dec 27 2024

விஜய் தலையில் விழுந்த பேரிடி.. தேச துரோக வழக்கு பதிவு செய்யவும் மனு..?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் நடிகர் விஜய் நேற்றைய தினம் தனது அரசியல் கட்சி ஆன தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதிகாரபூர்வமாக அறிவித்து ஏற்றி வைத்திருந்தார். குறித்த கொடி தொடர்பான பாடலையும் வெளியிட்டு இருந்தார்கள்.

தற்போது தனது அரசியல் பயணத்திலும் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கும் விஜய் மீது பல விமர்சனங்கள் குவிந்தவாறு  உள்ளன. மேலும் நேற்றைய தினமே விஜயின் கட்சி கொடியில் உள்ள இரண்டு யானைகளையும் பயன்படுத்தக் கூடாது அதை அகற்றுமாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சின்னங்களிடம் பெற்றதாகவும் தேச துரோக வழக்கு பதிவு செய்யவும் மனு  வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


அதாவது தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்ட யானைகள் ஏற்கனவே வேறு கொடிகளில் பயன்படுத்தப்பட்டதாலும் அந்த சின்னத்தை பயன்படுத்த முடியாது எனவும் கூறப்பட்டதோடு, தற்போது ஸ்பெயின் நாட்டு கட்சி கொடி போலவே தனது கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ளார் எனவும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகின்றன.

எனினும் இந்த பிரச்சனைகளை எல்லாம் விஜய் எவ்வாறு கையாள போகின்றார் எவ்வாறு முடிவெடுக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement