• Dec 25 2024

ஜாக்கெட் வைத்து படமா! மும்பை பட விழாவில் தேர்வு! சந்தோசத்தில் "அங்கம்மாள்" டீம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை தான் கோடி துணி. இந்த கதையை தான் அங்கம்மாள் என்னும் படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி விபின் சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். 90களில் காலகட்டத்தில் ஒரு கிராமமே பார்த்து மிரண்டு போகும் அளவுக்கான பெண்ணாக இருக்கிறார் அங்கம்மாள். அவருடைய ஒரே மகன் சென்னையில் படித்ததோடு ரொம்பவும் மாடர்னாக யோசிக்கும் ஆளாக இருக்கிறார்.ரவிக்கை அணியும் பழக்கமில்லாத அங்கம்மாளுக்கும், அதை மாற்ற வேண்டும் என நினைக்கும் அவருடைய மகனுக்கும் இடையே நடக்கும் எதார்த்த கதைகளம் தான் இந்த படம்.


அங்கம்மாள் என்ற தமிழ் திரைப்படம் மும்பை பட விழாவில் ஒளிபரப்ப தேர்வாகியுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இதை தாண்டி தற்போது மும்பை சினிமாவை சேர்ந்த சில சினிமா விமர்சகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள் என இந்திய ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் அளவுக்கு இந்த படம் வட மாநிலத்தவர்களை கவர்ந்திருப்பது தான் பெரிய ஆச்சரியமாக உள்ளது. 


Advertisement

Advertisement