• Dec 26 2024

கேவலமா இல்லையா.. உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு.. திட்டிய நெட்டிசனுக்கு அனிதா சம்பத் பதிலடி..

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் பதிவு செய்த வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட் செய்தவர்களை வெளுத்து வாங்கி அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு சுற்றுலா செல்வது குறித்த தகவல்களை வெளியிட்டு இருந்தார். பெண்கள் மட்டுமே செல்லும் இந்த சுற்றுலாவில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கான விமான கட்டணம் ரூ.30,000 தங்குமிடம் உணவு செலவுக்கு ரூ.20,000  என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இது பற்றிய முழு விவரத்தை அவர் தெரிவித்த நிலையில் இந்த பதிவின் கமெண்டில் சிலர் நெகட்டிவாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு பல நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாலத்தீவுக்கு எதற்காக செல்கிறீர்கள்? கேவலமா இல்லையா? உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு’ என்று சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்திருந்தனர்.



அதற்கு அனிதா சம்பத் பதிலளித்த போது, ‘ஆம்ஸ்ட்ராங்கை நடுரோட்டில் கொலை செய்தது இந்தியா தானே?  ஒன்பது வயது சிறுமியை கற்பழித்தது இந்தியாவில் தானே?  ஒரு பெண்ணை பீஸ் பீசாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கிறது இந்தியாவில் தானே?  வேலையில்லா திண்டாட்டம் இருப்பது இந்தியாவில் தானே?  லஞ்சம் வாங்குற இந்தியா தானே?  சாதி மாதிரி திருமணம் செய்தால் அருவா எடுத்து வெட்டுவது இந்தியா தானே?  வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்தால் கூட்டமாக சேர்ந்து கற்பழிக்கிறது இந்தியா தானே?  

எல்லா நாட்டிலும் இந்தியாவை பற்றி கேவலமா பேசிக்கிட்டு இருக்காங்க, அப்படி பார்த்தால் எந்த நாட்டுக்கும் போக முடியாது, நான் சொன்ன எதுவும் மாலத்தீவில் இல்லை, அரசியல் ரீதியாக சில ஸ்டண்ட் பண்ணி இருக்காங்க, மூளையை உபயோகிக்கவும், இது எல்லாமே அரசியல் பின்னணி தான்.

துபாய்ல நம்ம ஊருக்காரங்க போய் ஒட்டகம் மேய்க்கிறாங்க, ஏன் இந்தியன் கவர்மெண்ட் துபாய திட்டல? மாலத்தீவை மட்டும் திட்றாங்க, யோசித்துப் பாருங்கள்’ என்று கூறியுள்ளார். அனிதாவின் இந்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement