• Dec 26 2024

"கமல் மூளையை செக் பண்ண சொன்ன அண்ணாமலை.." நடு ரோட்டில் வண்டிமேல் ஏறி நின்று சினேகன் ஆவேசம்

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் தவிர்க்க முடியாத கலைஞன் கமல்காசன் ஆவார். நடிப்பு , இசை , இயக்கம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் உலக நாயகன் கமல்காசனை பற்றி அரசியல் வாதி அண்ணாமலை கூறிய விமர்சனத்திற்கு ஆவேசமாக பதில் கூறியுள்ளார் சினேகன்.


நடிகராக இருந்து சமீபத்தில் அரசியலுக்குள்ளும் சென்றவர் கமல்காசன் இவர் சமீபத்தில் தி.மு.க கட்சியுடன் கூட்டணி வைத்தது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கமலுக்கு மூளையை செக் பண்ண வேண்டும் என கூறியிருந்தார்.


இதனால் ஆவேசமடைந்த பாடல் ஆசிரியர் சினேகன் கமலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். வண்டியில் ஏறி நின்று பிரச்சாரம் செய்யும் அவர் கூறுகையில்" இருபதாயிரம் புத்தகங்களை படித்த அண்ணாமலை அவர் படித்த எந்த புத்தகத்திலும் மூளையை பற்றி படிக்கவில்லையா? மூளையை பற்றி பேசுபவருக்கு முதலில் மூளை உள்ளதா? " என ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement