• Dec 25 2024

வீட்டுக்கு வந்த அண்ணாமலை வைத்த ட்விஸ்ட்..! மீனாவை அழைத்துவர கிளம்பும் முத்து! சிறகடிக்க ஆசை சீரியல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது

அதன்படி இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை கண் விழிக்க விஜயா கண் கலங்கி நிற்கிறார். இத பார்த்த அண்ணாமலை 'எனக்கு ஏதாவது ஆனா நீங்க  என்ன பண்ணுவீங்க என்ற பயந்தான் எனக்கு இருந்த'  என்று கூறுகிறார். அதன்பின் முத்து ஓடிவந்து நலம் விசாரிக்கிறார். மீனா குறித்து அண்ணாமலை விசாரிக்க அப்படியே கத பேச்ச மாற்றி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர்.

வீட்டிற்கு வந்த அண்ணாமலை 'பணத்துக்கு என்ன பண்ணீங்க?' என்று விசாரிக்க 'அதெல்லாம் விடுப்பா' என்று முத்து சொல்ல, 'அவன் கார வித்துட்டான்' என்று விஜயா கூறுகிறார். 'ஏன் நம்ம வீட்டு பத்திரத்த வைக்க வேண்டிய தானே' என அண்ணாமலை சொல்ல, 'அத தானே மீனா எடுத்துட்டு ஓடிட்டா' என விஜயா சொல்ல, 'நீங்க எல்லாரும் மீனாவை தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க, நான் பத்திரத்தை கொடுத்த அப்பவே என்ன தனியா சந்திச்சு இது உங்க கிட்ட இல்லனா அத்தை கிட்ட தான் இருக்கணும் அதுதான் நியாயம் என்று சொல்லி பத்திரத்தை திருப்பி கொடுத்துட்டா அது இப்போ நம்ம பீரோல தான் இருக்கு' என அண்ணாமலை உண்மையை உடைக்கிறார்.


அதைத்தொடர்ந்து அண்ணாமலை மீனாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்ல 'அவள் ஒரு தரித்திரம் போய் தொலையட்டும்' என்று விஜயா சொல்ல, மீனா  வீட்டை விட்டு போனதுக்கு பிறகு தான் நமக்கு பெரிய பிரச்சனையே வந்தது. மீனா வராம நான் மாத்திரை போட மாட்டேன் சாப்பிட மாட்டேன் என அண்ணாமலை உறுதியாக இருக்க, வேறு வழி இல்லாமல் மீனாவை அழைக்க செல்கிறார் முத்து. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement