• Dec 25 2024

தங்கலான் படத்தின் அர்த்தம் இது தானா?- முக்கிய சீக்ரெட்டை உடைத்த விக்ரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.


இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் வாயடைத்து போயிருக்கின்றனர். வசனம் எதுவும் இல்லாமல் காட்சிகள் மூலமே பா.இரஞ்சித் மிரட்டிவிட்டார். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லிவருகின்றனர்.

இப்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹைதராபாத்துக்கு விக்ரமும், பா.இரஞ்சித்தும் சென்றனர். அப்போது பேசிய விக்ரம், "தங்கலான் என்றால் தனி இல்லை. அது ஒரு பழங்குடி பெயர். இந்தப் படத்தின் வழக்கமான பாடல்களோ, சண்டை காட்சிகளோ, சினிமாத்தனமான கிளாமரோ இருக்காது. 

 படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக வசனங்கள் எதுவும் இல்லை. லைவ் சவுண்டிங்கில் படம் செய்ததால் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மேக்கப் போட 3 மணி நேரம் ஆகும். இரஞ்சித் தொடர்ந்து அர்த்தமான படங்களை உருவாக்குகிறார். இந்தப் படம் மூலம் ரசிகர்களை அவர் புதிய உலகத்துக்குள் அழைத்து செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.


Advertisement

Advertisement